திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த,
கூடலர் ஆடலர் ஆகி, நாளும் குழகர் பலி தேர்வார்
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதி(ந்) நியமமே.

பொருள்

குரலிசை
காணொளி