தோடு ஒரு காது, ஒரு காது சேர்ந்த குழையான், இழை
தோன்றும்
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான், மறை ஓதி,
நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானைப்
பாடுமின், நீர் பழி போகும் வண்ணம்! பயிலும்! உயர்வு
ஆமே.