வெண் நிலவு அம் சடை சேர வைத்து, விளங்கும் தலை
ஏந்தி,
பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான்;
அருள் ஆர்ந்த
அண்ணல்; மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்
தன்னை
நண்ணல் அமர்ந்து, உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசு
அறுமே.