திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

வான், அமர் தீ, வளி, நீர், நிலன் ஆய், வழங்கும் பழி
ஆகும்
ஊன் அமர் இன் உயிர் தீங்கு குற்றம் உறைவால், பிறிது
இன்றி,
நான் அமரும் பொருள் ஆகி நின்றான்-திரு நாரையூர்
எந்தை,
கோன்; அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே.

பொருள்

குரலிசை
காணொளி