வெற்று அரை ஆகிய வேடம் காட்டித் திரிவார், துவர்
ஆடை
உற்ற (அ)ரையோர்கள், உரைக்கும் சொல்லை உணராது,
எழுமின்கள்
குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான், குழகன், தொழில்
ஆரப்-
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான், திரு நாரையூர்
சேரவே!