திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான்
தோள
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான், கரவாதார்
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன், இடம்போலும்
தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர் தானே.

பொருள்

குரலிசை
காணொளி