சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம்
தரனே!
அதிர் ஒளி சேர் திகிரிப்படையால் அமர்ந்தனர் உம்பர்,
துதிப்பு அடையால்,
மதி தவழ் வெற்பு அது கைச் சிலையே; மரு விடம் ஏற்பது
கைச்சிலையே
விதியினில் இட்டு அவிரும் பரனே! வேணுபுரத்தை விரும்பு
அரனே!