இலங்கை அரக்கர் தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க,
இறையே,
புலன்கள் கெட உடன் பாடினனே; பொறிகள் கெட
உடன்பாடினனே;
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே;
கலந்து அருள் பெற்றதும் மா வசியே; காழி அரன் அடி மா
வசியே.