உடன் பயில்கின்றனன், மாதவனே, உறு பொறி காய்ந்து
இசை மா தவனே;
திடம் பட மாமறை கண்டனனே, திரிகுணம் மேவிய
கண்டனனே;
படம் கொள் அரவு அரை செய்தனனே; பகடு உரிகொண்டு
அரை செய்தனனே;
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே, தோணிபுரத்து
உறை நம் சிவனே.