திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

ஈண்டு துயில் அமர் அப்பினனே இருங் கண் இடந்து அடி
அப்பினனே;
தீண்டல் அரும் பரிசு அக் கரமே திகழ்ந்து ஒளி சேர்வது
சக்கரமே;
வேண்டி வருந்த நகைத் தலையே மிகைத்து அவரோடு
நகைத்தலையே
பூண்டனர்; சேரலும் மா பதியே, புறவம் அமர்ந்த
உமாபதியே.

பொருள்

குரலிசை
காணொளி