திகழ் கையதும் புகை தங்கு அழலே; தேவர் தொழுவதும்
தம் கழலே;
இகழ்பவர் தாம் ஒரு மான் இடமே; இருந் தனுவோடு எழில்
மானிடமே;
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே, மின்
நிகர்கின்றதும், அம் சடையே,
தக இரதம் கொள் வசுந்தரரே, தக்க தராய் உறை சுந்தரரே.