கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரி
கத்தினனே,
மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை
சேனம் அதே,
நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து
அலரே
பண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர்,
பசுபதியே.