மைத் திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை
சேர்வதும்; மா சு(ண்)ணமே
மெய்த்து உடல் பூசுவர்; மேல் மதியே; வேதம் அது ஓதுவர்,
மேல் மதியே;
பொய்த் தலை ஓடு உறும், அத்தம் அதே; புரிசடை வைத்தது,
மத்தம் அதே;
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர்,
வெங்குருவே.