பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கடம் பட(ந்) நடம் ஆடினாய்; களைகண் நினைக்கு ஒரு காதல் செய்து, அடி ஒடுங்கி வந்து அடைந்தேன்; ஒழிப்பாய், பிழைப்ப எல்லாம்!- முடங்கு இறா, முது நீர் மலங்கு, இள வாளை, செங்கயல், சேல் வரால், களிறு, அடைந்த தண் கழனி, அணி ஆரூர் அம்மானே!