பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முளைத்த வெண்பிறை மொய் சடை உடையாய்! எப்போதும் என் நெஞ்சு இடம் கொள வளைத்துக் கொண்டிருந்தேன்; வலி செய்து போகல் ஒட்டேன் அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகு தந்த காலமும் கண்டு தன் பெடை திளைக்கும் தண் கழனித் திரு ஆரூர் அம்மானே!