பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும் தவழ்தரு மதியம் வைத்து, தன் அடி பலரும் ஏத்த, மழு அது வலங்கை ஏந்தி, மாது ஒருபாகம் ஆகி, எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே.