திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம்,
மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற
அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டாா
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி