திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்;
அண்டனே! அண்டவாணா! அறிவனே! “அஞ்சல்!” என்னாய்
தெண் திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!

பொருள்

குரலிசை
காணொளி