பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம், ஒன்னார் மதில் மேல் சென்று அடைந்து ஆடி, பொருததும், -தேசம் எல்லாம் அறியும்;- குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரை மேல், சென்று அடைந்தார் வினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே!