திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி,
உண்டு இறே என்று உகவன்மின், ஏழைகாள்!
கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை,
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!

பொருள்

குரலிசை
காணொளி