முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று,
முன்னும் ஆய், பின்னும் ஆய், முக்கண் எந்தை;
பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு, கங்கை,
பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார்; பெரிய நஞ்சுக்
கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை-
கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;
மறை ஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை,
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.