விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரி கதிரோன்,
எரி சுடரான், விண்ணும் ஆகி,
பண் அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி;
பாசுபதன்; தேசமூர்த்தி;
கண்ணப்பன் கண் அப்பக் கண்டு உகந்தார்-
கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழி
வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.