பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன்
புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக,
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும்,
ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு
கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி
வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.