பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்;
புலித்தோலர்; பொங்கு அரவர்; பூணநூலர்;
அடி நாறு கமலத்தர்; ஆரூர் ஆதி; ஆன் அஞ்சும்
ஆடும் ஆதிரையினார் தாம்-
கடி நாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை
மேய கபால(அ)ப்பனார்;
மடி நாறு மேனி இம் மாயம் நீங்க வழி வைத்தார்க்கு,
அவ் வழியே போதும், நாமே.