திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப்
பேதப்படுகின்ற பேதை மீர்காள்!
நிணம் புல்கு சூலத்தர்; நீலகண்டர்; எண் தோளர்;
எண் நிறைந்த குணத்தினாலே
கணம் புல்லன் கருத்து உகந்தார்; காஞ்சி
உள்ளார்-கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழி
வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

பொருள்

குரலிசை
காணொளி