பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தலை இடை ஆர் பலி சென்று அகம் தோறும் திரிந்த செல்வர்; மலை உடையாள் ஒரு பாகம் வைத்தார்; கல்-துதைந்த நன்நீர்- அலை உடையார்; சடை எட்டும் சுழல, அரு நடம் செய் நிலை உடையார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .