பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ? அற்றப் பட ஆரூர் அது என்று அகன்றாயோ? முற்றா மதி சூடிய கோடிக் குழகா! எற்றால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!