பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மைந்து அணி சோலையின் வாய் மதுப் பாய் வரி வண்டு இனங்கள் வந்து நந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம் அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும் புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே.