பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நலம் பெருகும் சோணாட்டு நாட்டி யத்தான் குடி வேளாண் குலம் பெருக வந்து உதித்தார்; கோட்புலியார் எனும் பெயரார்; தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரிய ராய் வேற்றுப் புலம் பெருகத் துயர் விளைப்பப் போர் விளைத்துப் புகழ் விளைப்பார்.