பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு ஆடலினான், கண் ஒளி சேர் நெற்றியினான், காதலித்த தொல் கோயில் விண் ஒளி சேர் மா மதியம் தீண்டியக்கால் வெண் மாடம் தண் ஒளி சேர் ஆக்கூரில் தான் தோன்றிமாடமே.