திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய
தொன்மையான், தோற்றம் கேடு இல்லாதான், தொல்
கோயில்
இன்மையால் சென்று இரந்தார்க்கு, "இல்லை" என்னாது,
ஈந்து உவக்கும்
தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

பொருள்

குரலிசை
காணொளி