பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான், இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது மலங்கி ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல் கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.