“எம் தமது சிந்தை பிரியாத பெருமான்!” என இறைஞ்சி,
இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை
அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற
அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி
சண்பைநகரே.