பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த
பரமன்,
ஆலும் மயில் போல் இயலி ஆயிழைதனோடும், அமர்வு
எய்தும் இடம் ஆம்
ஏலம் மலி சோலை இனவண்டு மலர் கெண்டி, நறவு உண்டு
இசைசெய,
சாலி வயல் கோலம் மலி சேல் உகள, நீலம் வளர்
சண்பைநகரே.