போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை உண்டு,
பலபொய்
ஓதி, அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை; நன்று அது
உணர்வீர்! உரைமினோ
ஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த
பதிதான்,
சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள்
சண்பைநகரே!