திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி,
பகவன்,
அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர்
பெருமானது இடம் ஆம்
இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில், நீடு விரை ஆர்
புறவு எலாம்,
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர்
சண்பைநகரே.

பொருள்

குரலிசை
காணொளி