கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள் கட்ட, நடம் ஆடி,
குலவும்
பட்டம் நுதல், கட்டு மலர் மட்டு மலி, பாவையொடு மேவு
பதிதான்-
வட்டமதி தட்டு பொழிலுள், தமது வாய்மை வழுவாத
மொழியார்
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில்
சண்பைநகரே.