நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம்,
ஆம்
மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்,
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ்
புறவு எலாம்
சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில்,
சண்பைநகரே.