விண் பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவுதான்
மிக உடை
மண் பொய் அதனால் வளம் இலாதொழியினும், தமது வண்மை
வழுவார்
உண்ப கரவார், உலகின் ஊழி பலதோறும் நிலை ஆன
பதிதான்-
சண்பைநகர்; ஈசன் அடி தாழும் அடியார் தமது தன்மை
அதுவே.