“பிணியும் இலர், கேடும் இலர், தோற்றம் இலர்” என்று உலகு
பேணிப்
பணியும் அடியார்களன பாவம் அற இன் அருள் பயந்து,
துணி உடைய தோலும், உடை கோவணமும், நாகம், உடல்
தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது
அவளிவணலூரே.