கூடு அரவம் மொந்தை, குழல், யாழ், முழவினோடும் இசை
செய்ய,
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து, பேர் இடபமோடும்,
காடு அரவம் ஆகு கனல் கொண்டு, இரவில் நின்று, நடம்
ஆடி,
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது
அவளிவணலூரே.