பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த
புகழோனும்,
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர்மேல் விழுமியோனும்,
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று, சிறிதேயும்
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே