புனம் உடை நறுமலர் பலகொடு தொழுவது ஒர் புரிவினர்
மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர்,
இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது
ஒர்
சினம் முதிர் விடை உடை அடிகள் தம் வள நகர் சேறையே.