பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பன்றியர், பறவையர், பரிசு உடை வடிவொடு படர்தர, அன்றிய அவர் அவர், அடியொடு முடி அவை அறிகிலார் நின்று இரு புடை பட, நெடு எரி நடுவே ஒர் நிகழ் தரச் சென்று, உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே.