பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே!” என்கின்றாளால்; “எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே!” என்கின்றாளால்; “பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே!” என்கின்றாளால்- கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.