திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

நீற்றினை நிறையப் பூசி, நித்தலும் நியமம் செய்து
ஆற்று நீர் பூரித்து ஆட்டும், அந்தணனாரைக் கொல்வான்
“சாற்றும் நாள் அற்றது” என்று, தருமராசற்கு ஆய், வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.

பொருள்

குரலிசை
காணொளி