திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

சிலந்தியும் ஆனைக்காவில்-திரு நிழல் பந்தர் செய்து
உலந்து அவண் இறந்த போதே, கோச் செங்கணானும் ஆக,
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலம் தனில் பிறப்பித்திட்டார்-குறுக்கை வீரட்டனாரே.

பொருள்

குரலிசை
காணொளி