திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி,
அழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்ட, கண்டு
பிழைத்த தன் தாதை தாளைப் பெருங் கொடு மழுவால் வீச,
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

பொருள்

குரலிசை
காணொளி