திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

எடுத்தனன் எழில் கயி(ல்)லை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற, அலறிப் போய் அவனும் வீழ்ந்து,
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட,
கொடுத்தனர், கொற்றவாள் நாள்; குறுக்கை வீரட்டனாரே.

பொருள்

குரலிசை
காணொளி