திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

ஏறு உடன் ஏழ் அடர்த்தான், எண்ணி ஆயிரம் பூக் கொண்டு(வ்)
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக் கீழ்;
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை மிண்ட;
கூறும் ஓர் ஆழி ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

பொருள்

குரலிசை
காணொளி